MUSIC

                                           MUSIC                                       

 
 
மண்ணில் விழும்
மழைத் துளிகள்
எழுப்புவது இசை!

விண்ணில் பறக்கும்
பறவைக் கூட்டங்கள்
சிறகடிப்பது இசை!

மழலைச் செல்வங்கள்
அழுவது சிரிப்பது
மயங்க வைக்கும் இசை!

மூங்கில் கிளைகள்
முத்தமிட்டுக் கொண்டு
தலையாட்டுவது இசை!

காதலர்கள்
பூவிதழ்கள் சந்தித்து
கொள்ளும்போது
எழும் இன்ப இசை!

விண்ணில்
தவழும் மேகங்கள்
வானில் முத்தமிடுவது
இடிமின்னல் இசை!

கடல் அலைகள்
எழுந்து விழும்போது
மோதும்போது இசை!

சிற்பியின் சிற்றுளி
கல்லோடு உறவாடும்போது
எழும் இசை!

இதயத்தில்
இடை விடாமல் ஒலிக்கும்
லப் டப் இசை !

உலகில்
எல்லாமே இசை மயம்
சுரங்கள் இல்லாத இசை
எதிலும் இசை
இசை இல்லாமல்
இவ்வுலகம் இயங்குமா ?
 

Comments

Popular posts from this blog

மூவேந்தர்கள்

audio video resources

GK